காலை உணவுக்குப் பதில் பிஸ்கட் பாக்கெட்டா..? - அரசுப் பள்ளி அவலநிலையைச் சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் அறிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 பள்ளி மாணவர்கள் உணவின்றித் தவித்து, அவர்களுக்குப் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக வெளியாகிய செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பசியின்றி படிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படும் மக்கள் நலத்திட்டங்களைக் கூட சரியாகச் செயல்படுத்தத் தெரியாத ஒரு திறமையற்ற அரசாக விஜய் அரசு செயல்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறும் விசித்திரமான விளக்கம் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதற்கு ஏற்ப உணவின் அளவையும் அதிகரிக்க திட்டமிடாதது அரசு நிர்வாகத்தின் தவறே ஆகும்.
எனவே, தமிழக முதல்வர் விளாத்திகுளம் பள்ளிச் சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இது போன்ற அவலநிலை ஏற்படக் கூடாது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவிற்குப் பதில் பிஸ்கட் வழங்குவதா?
— Nainar Nagenthran (@NainarBJP) June 21, 2026
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 பள்ளி மாணவர்கள் உணவின்றித் தவித்து, அவர்களுக்குப் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக…