×

பில்லா ஜெகன் கைது -திமுகவில் இருந்து நீக்கம்

 


 திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவருமான பில்லா ஜெகன் மது குடித்துவிட்டு சுற்றுலா மாளிகையில் காவலரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.  திமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு இருக்கிறார்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன்.   இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.  நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார்.   தன் கூடப்பிறந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன.  ஆனாலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வளம் வந்துள்ளார்.

 தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா மாளிகை தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிமன்றம் ஆக செயல்பட்டு வருகிறது.  இந்த வளாகத்திற்குள் நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் சென்ற பில்லா ஜெகன்,  மது அருந்த  முற்பட்டிருக்கிறார்.  இங்கு  அனுமதி இல்லை என சுற்றுலா மாளிகை காவலாளி சதாம் சேட் கூறியிருக்கிறார்.   

இதனால் ஆத்திரத்தில் பில்லா ஜெகனும் அவரது கூட்டாளிகளும்  அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.   இந்த விவகாரம் வெளியே வந்தது திமுக தலைமையை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி உள்ளதாக அறிவித்திருக்கிறது.

ஆதரவாளர்களுடன் பில்லா ஜெகன் தாக்கியதில் தூத்துக்குடி சுற்றுலா மாளிகை காவலர் சதாம் சேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து தெற்கு காவல் நிலைய போலீசார் பில்லா ஜெகன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து செய்தனர்.   இது தெரிந்து பில்லா ஜெகன் உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டார்கள்.

 தலைமறைவானவர்களை  தீவிரமாக தேடி வந்த போலீசார் இன்று பில்லா ஜெகனை கைது செய்துள்ளனர்.