×

இரு மொழிக்கொள்கையே தமிழகத்தின் கொள்கை முடிவு! – செங்கோட்டையன் உறுதி

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை முடிவு என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதில் அனைவரும் மூன்று மொழி பயில வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் இல்லை என்று கூறிக்கொண்டே கட்டாயப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் இந்தி படிக்க விருப்பமா அல்லது கைத்தொழில் கற்றுக்கொள்ள விருப்பமா என்று கேட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த
 

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை முடிவு என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதில் அனைவரும் மூன்று மொழி பயில வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் இல்லை என்று கூறிக்கொண்டே கட்டாயப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.

கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் இந்தி படிக்க விருப்பமா அல்லது கைத்தொழில் கற்றுக்கொள்ள விருப்பமா என்று கேட்டதாக சர்ச்சை எழுந்தது.


இந்த நிலையில் இது குறித்து ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, “இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிக அளவில் நடந்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை இரு மொழி கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை முடிவு.


தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறக்க முடியாது. பெற்றோர், ஆசிரியர்களுடன் கலந்தாலோசனை செய்து தேதி இறுதி செய்யப்படும். அது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். ஆசிரியர் தகுதித் தேர்வைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்” என்றார்.