வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டில் வெற்றிப்பெற்ற மாடுபிடி வீரருக்கு பைக் பரிசு
புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் காலை 8:20 மணி முதல் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு மாலை 4.45 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் இரண்டாவது சுற்றில் களமிறங்கி சிறந்த முறையில் 11 காளைகளை தழுவிய புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் சங்கர் என்ற காளையருக்கும் நீண்ட நேரம் களமாடி வீரர்களை திக்குமுக்காடச் செய்த வன்னியன் விடுதி சிங்காரவேல் என்ற காளையின் உரிமையாளர் செல்வராஜுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் Hero HF Deluxe இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் சித்தி விநாயகர் மாயன் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு 66ம் ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.20 மணி முதல் நடைபெற்று வந்த நிலையில் மாலை 4.45 மணியுடன் நிறைவடைந்தது. இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 481 காளைகளும் 252 காளையர்களும் 5 சுற்றுகளில் களம்கண்டனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு 53 பேர் காயமடைந்த நிலையில் அதில் 13 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை தழுவிய வீரர்களுக்கும் காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளருக்கும் அண்டா மிக்ஸி குக்கர் கட்டில் நாற்காலி ட்ரெஸ்ஸிங் டேபிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் இரண்டாவது சுற்றில் களம் இறங்கி சிறந்த முறையில் 11 காளைகளை தழுவிய புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்ற காளையருக்கு Hero HF Deluxe இருசக்கர வாகனத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பரிசாக வழங்கினார்.
அதேபோல் இரண்டாவது பரிசாக முதல் சுற்றில் களம் இறங்கி 8 காளைகளை தழுவிய வன்னியன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த புதுகை பாண்டி என்ற காளையருக்கு பசுவும் கன்றும்
அதேபோல் நான்காவது சுற்றில் களமிறங்கி 7 காளைகளை தழுவிய பள்ளத்தை விடுதியைச் சேர்ந்த வெத்தியப்பன் என்ற காளையருக்கு ஜல்லிக்கட்டு கன்று பரிசாக வழங்கப்பட்டது . அதேபோல் இந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் நீண்டநேரம் களமாடி வீரர்களை திக்குமுக்காடச் செய்த வன்னியன் விடுதி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் என்ற காளையின் உரிமையாளரான செல்வராஜ் என்பவருக்கு ஹீரோ HF Deluxe இருசக்கர வாகனத்தை பரிசாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். அதேபோல் இரண்டாவது இடத்தை
பள்ளத்தி விடுதி அண்ணாதுரையின் காளை பெற்று அவருக்கு பசுவும் கன்றும், மூன்றாவது பரிசை கதுவாரிப்பட்டி பாலமுருகன் காளை பெற்று அவருக்கு ஜல்லிக்கட்டு கன்று வழங்கப்பட்டது. மேலும் காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்த நிலையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் சுகாதாரத் துறையினர் தீயணைப்புத் துறையினர் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கண்காணிப்பில் கோலாகலமாக வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. மேலும் இந்த ஜல்லிக்கட்டு முதல் பரிசாக இருசக்கர வாகனத்தை பெற்ற காளையர் ஏ.மாத்தூர் சங்கர் தமிழ்நாடு முதலமைச்சர் காளையர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதாக அறிவித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் மாடுபிடி வீரர்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு மாடுபிடி வீரர்களுக்கு ஒரு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.