"ஒன்னு நான் வீட்டுல இருப்பேன்... இல்லனா ஆபிஸ்ல இருப்பேன்"- விஜய்க்கு ஜூலி சவால்
ஒன்னு நான் வீட்டுல இருப்பேன்... இல்லனா ஆபிஸ்ல இருப்பேன் என தவெக தலைவர் விஜய்க்கு ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி சவால் விடுத்துள்ளார்.
வேலூர் பரப்புரையில் விஜய் பேசியதை விமர்சித்து ஜூலி வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை மிரட்டி சமூக வலைதளங்களில் தவெகவினர் பதிவிட்டுவருவதால், ஜூலி மற்றொரு வீடியோவை வெளியிட்டு சவால் விடுத்துள்ளார்.
அதில், “விஜய் அண்ணா... உங்கள் வேலூர் பரப்புரையை பார்த்து அதில் ஒன்றுமே இல்லை என்ற ஆதங்கத்தில் வீடியோ ஓன்றை போட்டேன். உங்களுடைய ரசிகர்கள் அனைத்து சமூகவலைதளங்களிலும் என்னை கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மைனர் பசங்களிடம் இருப்பது பெரும்பாலும் Fake ID. அதற்காக நான் போட்ட வீடியோவை டெலிட் செய்யவும் மாட்டேன். என் கருத்துக்களில் இருந்து பின் வாங்கவும் மாட்டேன். என்னை மிரட்டினால் பரவாயில்லை. ஆனால் என்னை சார்ந்தவர்களையும் மிரட்டுவதால் இதனை சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். விஜய் அண்ணா நான் உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டுமெனில், நான் வீட்ல இருப்பேன். இல்லன்னா என் ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க. என்னை சார்ந்தவங்கள எதுவும் பண்ண வேண்டாம். ஓ... நீங்க பனையூரை விட்டு வெளியே வர மாட்டிங்கல்ல... நான் இன்னும் உயிரோட தான் இருக்கிறேன். நான் வேண்டுமானாலும் பனையூர் வருகிறேன். ஒரு பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் எவ்வளவு மதிப்பும், பாதுகாப்பும் உங்கள் ரசிகர்கள் கொடுக்கின்றனர் என்பதை அந்த வீடியோவில் உள்ள கமெண்ட்ஸ்களை படித்து பாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.