×

“திரிஷா மாதிரி மனைவி வேண்டும்” - பிக் பாஸ் திவாகர்

 

திருமணம் செய்ய த்ரிஷா போல பெண் வேண்டும் என பிக்பாஸ் பிரபலம் திவாகர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிக்பாஸ் பிரபலம் திவாகர், “வடச்சென்னை 2ஆம் பாகத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன். பல அவமானங்கள் கேலி, கிண்டல்களை தாண்டி படத்தில் ஹீரோவாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விஜய், சிவகார்த்திகேயனுக்கு இணையாக எனக்கும் ரசிகர்கள் உள்ளனர்.  எனக்கு வரவிருக்கும் மனைவி த்ரிஷா அல்லது சமந்தா போல் இருந்தால் நன்றாக இருக்கும். நடிப்பு என்றால் சிவாஜிக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன். அதற்கடுத்து நான் தான். ஹீரோவாக அனைத்து திறமைகளும் இருக்கிறது. ஆனால் என்னை பார்த்து பயந்து, சூழ்ச்சிகள் செய்கிறார்கள். மதுரையில் இருந்து கேப்டன் விஜயகாந்துக்கு அடுத்து எந்த ஒரு நடிகரும் பெரிதாக தமிழ் திரையுலகுக்கு வரவில்லை. அந்த இடத்தை நிரப்ப நான் வந்துள்ளேன். அவரை போல அடுத்த நடிகர் சங்க தலைவராகவும் ஆவேன். வெற்றி மாறன் சார் பட வாய்ப்புக்காக காத்துகிட்டு இருக்கேன் ” என்றார்.