மீண்டும் வீடியோ வெளியிட்டு விஜயை சீண்டிய பிக்பாஸ் ஜூலி..!
ஜல்லிகட்டு போராட்டத்தில் கவனம் ஈர்த்தவரும் பிக்பாஸ் மூலம் பிரபல்மாகி தற்போது நடிகையாக இருப்பவருமான ஜூலி கடந்த சில தினங்களாக தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "பெண்களை இழிவாகப் பேசும் ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி டிஜிபி-யிடம் புகார் அளிக்கலாம்? உங்கள் பிரபலத்தை வைத்துத் தேர்தலில் வெல்ல முடியாது. மேலும், நீங்கள் போட்டியிடும் தொகுதியை அறிவித்தால், அங்கு வந்து உங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன்" என அவர் சவால் விடுத்துள்ளார்.
விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் நின்று கொண்டிருந்த போலீஸ் ஜீப்பை கவனிக்காமல் அதில் மோதி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் விஜய்யை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் பிக் பாஸ் ஜூலி. ஐம்பது ஐம்பதாகவே இருக்கட்டும் 500 ஆக்கிவிடாதீர்கள் அண்ணே என்று நான் சொன்னதற்காக இந்த வல்கர் வாரியர்ஸ்(தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்களை தான் வல்கர் வாரியர்ஸ் என்கிறார் ஜூலி)கமெண்ட்ஸ் பகுதியில் பொங்கினாங்க. இன்று ஒரு புள்ள இறந்துவிட்டது. அதை வைத்து அரசியல் பேசக் கூடாது என்று நினைத்தாலும் மனது கேட்கவில்லை.
அண்ணன் அண்ணன் என்று ஆசையாக உங்களை பார்க்க வந்து தானே அந்த புள்ள போலீஸ் ஜீப்பில் மோதி இறந்துவிட்டது. அந்த புள்ள இறந்ததால் பெற்றோருக்கு தானே நஷ்டம். உங்களுக்கு என்ன வந்துச்சுணே, நீங்க ஜாலியாக விசேஷங்களுக்கு சென்று ஜாலியா இருப்பீங்க(கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண வரவேற்பு, மும்பையில் அட்லி மனைவி ப்ரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் விஜய் கலந்து கொண்டதை சொல்கிறார் ஜூலி). நம் வீட்டிலா ஒருவர் இறந்தார், அதனால் நீங்க எல்லோரும் ஜாலியாக இருங்கள். ஐம்பந்தை ஐநூறாக்கிவிட்டுவிடாதீங்கனு மீண்டும் சொல்றேன் அண்ணே.
அதுக்கு பேசினாயா, இதுக்கு பேசினாயா, இதுக்கு குரல் கொடுத்தியானு வந்துவிட வேண்டாம். எல்லாத்துக்கும் நாங்கள் பொறுப்பேற்கிறோம். 41 பேர் இறந்தபோது மீடியாவை பார்க்க பயந்து ஓடி ஒளியவில்லை. பெண்களுக்கு ஹராஸ்மென்ட், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைனு வேற. யாரிடம் இருந்து பாதுகாப்பு இல்லை என்று தெரியுமா?. உங்களின் வல்கர் வாரியர்ஸிடம் இருந்து தான் பாதுகாப்பு இல்லை. இரண்டு நிமிடம் கழித்து வந்து என் கமெண்ட்ஸ் செக்ஷனை பாருங்கள் எல்லாம் தெரியும் என்றார்.