டாஸ்க் கொடுத்த கமல் ; லைக் கொடுத்த தாமரை செல்வி - ப்ரோமோ வீடியோ!
பிக் பாஸ் சீசன் 5 இல் இன்றைய நிகழ்ச்சிக்கான 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் கமல் ஹாசன் போட்டியாளர்கள் முன் தோன்றி முதல் வாரம் குறித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக 2ஆவது நாளான இன்று கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கிறார். முதல் ப்ரோமோவில் அபிஷேக் பிரியங்கா குறித்து பேசுகிறார். அதில் பிரியங்கா எனக்கு அக்கா மாதிரி என்று கூறி கண்கலங்க அவரை பிரியங்கா சென்று கட்டிபிடித்து ஆறுதல் கூறுவது போல ப்ரோமோ வீடியோ இருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், கமல் ஹாசன் லைக், டிஸ்லைக் டாஸ்க் கொடுக்கிறார். தாமரை செல்வி பேசும் போது, இந்த நிகழ்ச்சி நான் பார்த்தது இல்ல சார். நான் குழந்தையில எப்படில்லாம் இருக்கனும், விளையாடனும், சிரிக்கணும்னு நெனைச்சனோ அப்படிலாம் இங்க இருந்த சார். நான் கோபமா இருந்தாலோ, மனசு சரியில்லாம இருந்தாலோ அண்ணாச்சி கூப்பிட்டு பேசுவேன் சார் என்று சொல்லி அவருக்கு லைக் கொடுப்பது போல் வீடியோ முடிகிறது.