#BIG NEWS : கரூர் விவகாரத்தில் விஜய்யின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி கைதாக வாய்ப்பு..!!
Updated: Jan 19, 2026, 09:36 IST
கரூரில் கடந்தாண்டு செப்., 27ல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட் டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவர்களின் விசார ணையை, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி கள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங் கிய உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர் பாக, சி.பி.ஐ., அதிகாரி களின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
அவர்கள், டில்லியில் உள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில், விஜய் மற்றும் தமிழக காவல் துறையின் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வா தம் மற்றும் ஜோஷி நிர் மல்குமார் ஆகியோரிடம், கடந்த 12ம் தேதி, ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக, விஜயிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி இருப்ப தால், ஜன., 19ல் மீண்டும் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ., சம்மன் அதிகாரிகள் அனுப்பினர். அதன்படி அவர், மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, த.வெ.க., வியூக வகுப் பாளரும், நடிகர் விஜயின் ஆலோசகருமான ஜான் ஆரோக்கியசாமியையும் விசாரணைக்கு அழைக்க முடிவெடுத்திருப்பதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறின.
அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
நடிகர் பங்கு முக்கியமானது. அவர் வடிவமைத்துக் கொடுத்த திட்டத்தின் விஜயின் பிரசார பயண கூட்டங் களை திட்டமிட்டதில், ஜான் ஆரோக்கியசாமியின்
அடிப்படையிலேயே, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விஜய் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார்.
கரூர் சென்ற விஜயின் வாகனத்தை, அனுமதிக் கப்பட்ட இடத்தை கடந்து சென்று நிறுத்தி, மக்கள் மத்தியில் பேசுமாறு கட்சி யினருக்கும், வாகனத்தை இயக்கிய டிரைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸ் அனுமதித்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி விஜய் பேசினால், அங்கு திரண்டிருக்கும் எதிர்ப்பாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி, வாகனத்தை நோக்கி கற்கள் வீசக்கூடும்.
எனவே, வாகனத்தை தள்ளி நிறுத்த வேண்டும் என ஜான் ஆரோக்கிய சாமி தான் உத்தரவிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையிலேயே வாகனம் தள்ளி நிறுத்தப் பட்டுள்ளது. இதை, ஏற் கனவே விசாரணைக்கு சென்ற த.வெ.க.,வினர் விசாரணையின் போது கூறியுள்ளனர்.
கற்கள் வீசப்படும் என்ற தகவல் ஜான் ஆரோக்கிய சாமிக்கு எப்படி கிடைத் தது; அப்படியென்றால், அந்த தகவலை அவரிடம் கூறியது யார்? தகவலின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது.
அதையடுத்தே, ஜான் ஆரோக்கியசாமியை விசா ரணைக்கு அழைக்க முடி வெடுத்திருக்கிறோம். விரைவில், அவருக்கும் சம்மன் அனுப்பப்படும்.
இவ்வாறு வட்டாரங்கள் கூறின.
இதற்கிடையே நடிகரான விஜய்க்கு கட்சி கூட்டம் மற்றும் மாநாட்டிற்கு எந்த வகையில் பணம் வருகிறது என்று சிபிஐ அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் பின்னணி குறித்து தனியாக விசாரணை நடத்தினர். ஜான் ஆரோக்கியசாமி கிறிஸ்துவ போதகர் என்று தெரியவந்தது. பல கிறிஸ்துவ பிராத்தனை கூட்டங்களில் ஜான் ஆரோக்கியசாமி பேசிய வீடியோக்களை பெற்று ஆய்வு செய்தபோது, அவர், வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்துவ அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் அவருக்கு வெளிநாடுகளில் இருந்து பல நூறு கோடி ரூபாய் பணம் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் மூலம் வருவதும் தெரியவந்தது.
அதோடு இல்லாமல் ஜான் ஆரோக்கியசாமி கிறிஸ்துவ கூட்டங்களில் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ‘சாத்தானின் பிள்ளைகள்..... ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளிடம் தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள்’ என்று பேசியது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விஜய் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மீது தனி கவனம் செலுத்தி நடிகர் விஜய் உடனான தொடர்புகள் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திய போது, கிறிஸ்தவ மத வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிய பல நூறு கோடி பணத்தை நடிகர் விஜய் நடத்தும் தவெக கட்சி செலவுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.
அதற்கான வங்கி கணக்கு விபரங்களை அனைத்தையும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைப்புகளை கண்காணிக்கும் என்ஐஏ மூலம் உறுதியாகியது. வெளிநாட்டு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் வியூகங்களை முறியடிக்க நடிகர் விஜய் மூலம் ஜான் ஆரோக்கியசாமி திட்டமிட்டது தெரியவந்துள்ளது. விஜய் . கட்சி ஆரம்பித்தது முதல் ஜான் ஆரோக்கிய சாமி உதவியுடன் தமிழகத்தில் பல நூறு கோடி பணம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை மத்திய உளவுதுறையும் உறுதி செய்துள்ளது.
இதுவரை நடிகர் விஜய்யின் கட்சி பணிக்கான அனைத்து செலவுகளை நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி மட்டுமே ரகசியமாக கவனித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
சிபிஐ சம்மன்படி ஜான் ஆரோக்கியசாமி இன்று நேரில் ஆஜரானால், அவரிடம் தவெக பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டுகளுக்கு செலவு செய்த பணம் தொடர்பான கேள்விகளை வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் வங்கி கணக்கு விபரங்களுடன் நேரடியாக கேட்க உள்ளனர். அப்போது நடிகர் விஜயிடமும் ஜான் ஆரோக்கிய சாமி முன்னிலையில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக தெரிகிறது. சிபிஐ மற்றும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக தவெக கட்சிக்கு பயன்படுத்தியது உறுதியானால், ஜான் ஆரோக்கியசாமியை சிபிஐ அதிகாரிகள் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படலாம். அதன் பிறகு அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி இறுதியில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.