#BIG NEWS : விஜயின் அடுத்த மூவ்..! தற்காலிக சபாநாயகர் ஆகிறார் முன்னாள் சபாநாயகர் மகன் லோகேஷ் தமிழ்செல்வன்..?
அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டார். தற்போது தவெகவில் இணைந்தார்.
ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட லோகேஷ் கனகராஜ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ப்ரேம்குமாரை 14 ஆயிரத்து 511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ப்ரேம்குமார் 62 ஆயிரத்து 297 வாக்குகள் பெற, லோகேஷ் கனகராஜ் 74 ஆயிரத்து 808 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் சபாநாயகராக லோகேஷ் தமிழ்ச்செல்வனை நியமிக்க முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் யாரென்றால் அதிமுக ஆட்சியில் சபாநாயகராக பொறுப்பு வகித்த தனபாலின் மகன் ஆவார்.
தனபால் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவரது இல்லத்திற்குச் சென்ற அப்போதைய அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் பலரும் அவர் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே அவரது இல்லத்தில் சாப்பிட மறுத்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ஜெயலலிதா சட்டமன்றத்தில் அவர் முன்பு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக தனபாலை சபாநாயகராக நியமித்தார்.
தற்போது ஜெயலலிதா பாணியில் பட்டியலினத்தைச் சேர்ந்த லோகேஷ் தமிழ்செல்வனை சபாநாயகராக நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.