#BIG NEWS : ஈரான் - USA போர் நிறுத்த அறிவிப்பால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது..!!
Apr 8, 2026, 09:57 IST
ஈரான் போர் பதற்றம் குறைந்ததால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை எகிற தொடங்கியது.
தமிழகத்தில் தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.13,860-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஏப்., 08) ஒரு கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ரூ.14,200-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600-க்கும் விற்கப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,65,000-க்கும் விற்கப்படுகிறது. ஈரான், அமெரிக்க போர் நிறுத்தம் காரணமாக தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது