×

#BIG NEWS : விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை - திருவாரூர் கோர்ட்டு உத்தரவு..!!

 

 பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராடிய பொழுது பொதுச்சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது சம்பந்தமான வழக்கு திருவாரூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.