☰
×

#BIG NEWS : மூன்று நாட்கள் வங்கி வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு..!!

 

*மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு*

வாரத்தில் 5 நாட்களுக்கு வேலைத்திட்டத்தை அமல்படுத்துவது, அனைத்து ஊழியர்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் பிஎல்ஐ (லாபத்தின் அடிப்படையில் இணைப்பு ஊக்கத்தொகை) சமமாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஐக்கிய மன்றமும், இக்கோரிக்கைகளுடன் ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் நாடு தழுவிய அளவில் செப்.28  முதல் 30-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, ஐபிஏ உடன் தற்போது (9.30 மணிக்கு) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனவே மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்படுகிறது.

சனிக்கிழமைகளை விடுமுறை நாட்களாக அறிவிப்பது குறித்து ஆலோசிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.