#BIG NEWS : தவெக கூட்டணியில் இணைகிறது விசிக: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் திருமாவளவன்..!!
விசிக சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழவில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்,
எனக்கென்று ஒரு அரசியல் நேர்மை இருக்கிறது. வெறும் பதவிக்காக, பொருளுக்காக, புகழுக்காக நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்பவன் நான் இல்லை என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்தியுள்ளேன். யார் இதைப்பற்றி பேசினார்கள்.
பேரம் பேசினேன் பணியவில்லை என்றும், வாய்ப்பு நிறைவேறவில்லை, அதனால் இன்று தவெகவுக்கு ஆதரவு என்று பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு விசிக எந்தவகையில் துரோகம் விளைவித்தது என்பதை யாரால் சொல்ல முடியுமா? ஆதாரம் காட்ட முடியுமா? வெளிப்படையாக விவாதிக்க முடியுமா?
தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடைசி நொடி வரையில், திமுக தலைமைக்கு தகவல் கொடுத்தேன். இப்படித்தான் முடிவெடுக்கப் போகிறோம், இப்படித்தான் நிலைப்பாடு எடுக்கப் போகிறோம், இதுதான் காரணம் என்பதை வெளிப்படையாக பேசினோமா, இல்லையா? ஒப்புதல் பெற்றோமா, இல்லையா? உங்கள் தோழமையை பாராட்டினோமா, இல்லையா? நட்புறவை சிதைக்கக் கூடாது என்று இருந்தோமா இல்லையா?
தவெக கூட்டணியில் சேருவோம் என்று முடிவெடுத்தால், நீங்க அமைச்சரானால் தான் தமிழகத்தில் எழுச்சி உருவாகும். அதற்கு நீங்கள் உடன்பட வேண்டும் என்று கட்சியினர் ஆலோசனை கொடுத்தார்கள். ஆனால், அதற்கும் நான் உடன்படவில்லை. என்னைப் பற்றிய தனிப்பட்ட முடிவை எடுக்க அதிகாரமும், சுதந்திரமும் இருக்கிறது. 10 நாட்களுக்குப் பிறகு தான் தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை அறிவித்தோம்.
என்றும் நட்புக்கும், தோழமைக்கும் உறுதுணையாக இருப்போம். 5 ஆண்டுகள் வரை உங்கள் ஆட்சி தொடரும். நாங்கள் துணையிருப்போம் என்று சொன்னோம். இதில் என்ன துரோகம் இருக்கிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்று திமுக தலைமையே அறிவித்து விட்டது. இதுவரையில் நான் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கிறோமா? என்று நான் அறிவிக்கவில்லை. அமைச்சரவையில் இருக்கிறோம். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 1ம் தேதி நடந்தது, அதில் பங்கேற்றோம். இன்னும் அங்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படியொரு கூட்டணி அமைந்தால் இடம்பெறுவோம். அதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
இதை ஏன் இப்போது நான் சொல்கிறேன் என்றால், திமுகவின் தலைவர்களே ஒன்று கூடி, விசிக நிர்வாகியை அழைத்து திமுகவில் இணைத்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால், விசிகவுடன் எங்களுக்கு உறவில்லை என்று திமுகவே சொல்கிறது. நானா சொன்னேன். விசிகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தது ஸ்டாலின் தான். அவர் மீதான மதிப்பும் என்றும் குறையாது. பாஜவில் இருக்கும் தலைவர்களுக்கே மரியாதை கொடுப்பவர் திருமாவளவன், இவ்வாறு அவர் கூறினார்.