×

#BIG NEWS : நாகர்கோவில் சிறை மரணத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை..உடம்பெல்லாம் ரத்தக் கட்டுகள், உடைந்த மணிக்கட்டு!

 

நாகர்கோவில் கிளைச் சிறையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாகக் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் (35) மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், தற்பொழுது அதிர்ச்சியூட்டும் பிரேத பரிசோதனை (Autopsy) அறிக்கை வெளியாகியுள்ளது. நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகச் சிறைத்துறை தரப்பில் முதலில் கூறப்பட்ட நிலையில், அவர் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, மூச்சுத்திணறித்தான் மரணமடைந்துள்ளார் என்பது கூராய்வு அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையின்படி, அவரது உடலில் 19 இடங்களில் கொடூரமான காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவரது வலது கை மணிக்கட்டு எலும்பு முற்றிலும் உடைந்துள்ளதோடு, பலத்த தாக்குதலால் மூளையில் உள்ள ரத்த நாளங்கள் வீக்கமடைந்த நிலையில் இருந்துள்ளன. மேலும், அவரது இதயம் மற்றும் நுரையீரலின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள சிறிய புள்ளிகள் மற்றும் உடலில் உள்ள பலமான காயங்கள் யாவும், அவர் உயிரிழப்பதற்கு முன்பு தப்பிக்கக் கடுமையான போராட்டத்தை நடத்தியுள்ளார் என்பதையும், அதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் அவரது உயிர் பிரிந்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளன.

மிகவும் கொடூரமாகச் சபரிவர்மனின் கைகள் மற்றும் கால்களைக் கயிற்றால் கட்டிப்போட்டு அடித்ததற்கான ஆழமான தழும்புகளும் காயங்களும் அவரது உடலில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறைச்சாலையின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சிறைக் கைதிகளான ரவுடிகள் அஜித், பெருமாள், ஜெகன் உள்ளிட்ட 8 கைதிகளையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த தலைமை வார்டன் திருமலைநம்பி சுரேஷ், வார்டன்கள் சிவக்குமார் மற்றும் ஜெகன் ஆகிய 3 சிறைத்துறை ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் சிறைக்குள் அடைத்து வைத்து சபரிவர்மனை அடித்துக் கொலை செய்துள்ள இந்தச் சம்பவம், தமிழகத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தைப் போல அரங்கேறியுள்ள இக்கொலைக்கு எதிராக திமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. 

நாகர்கோவில் சிறைக்கைதி கொ*லச் சம்பவம் - வெளியானது அதிர்ச்சி உடற்கூராய்வு ரிப்போர்ட்

Kanniyakumari | Prisonerdeath | 17 July 2026#Newstamil24x7 #Autopsy #Newsreport pic.twitter.com/CZ2QQtWueO

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 17, 2026


 

நாகர்கோவில் சிறைக்கைதி கொ*லச் சம்பவம் - வெளியானது அதிர்ச்சி உடற்கூராய்வு ரிப்போர்ட்

Kanniyakumari | Prisonerdeath | 17 July 2026#Newstamil24x7 #Autopsy #Newsreport pic.twitter.com/CZ2QQtWueO

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 17, 2026