×

#BIG NEWS : மகளிருக்கு 25000 அறிவித்தார் தவெக தலைவர் விஜய்..! 

 

 புதுச்சேரி தேர்தல் அறிக்கையை அறிவித்தார் தவெக தலைவர் விஜய் :

துணை நிலை ஆளுநரின் தலையீடு இல்லாமல், மாநில அந்தஸ்து கொண்டு 100% முயற்சி செய்வோம். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்  நடத்தப்படும்.

மகளிருக்கு மகப்பேறு உதவித்தொகையாக ரூ.25000 வழங்கப்படும், 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மீனவர்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.20 மானியம் வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய விஜய், இங்க இரண்டு கூட்டணி நீங்கள் தனியா வந்து என்ன செய்ய போகிறீர்கள் என கேட்கின்றனர். இங்கு காங்கிரஸ் – திமுக கூட்டணி 5, 6 முறை ஏமாத்திடாங்க.  புதுச்சேரியில் திமுகவும் – காங்கிரஸும் பேருக்கு தான் கூட்டணி; அது ஒரு குழப்பமான கூட்டணி, தமிழகத்திலும் அப்படிதான் உள்ளது என்றார். பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி சோர்ந்து போன கூட்டணி எனவும் விமர்சித்த விஜய், இங்கு அரசியல் வியாபாரம் நடக்கிறது. 2 கூட்டணி உள்ள கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருந்தன. ஆனால் 2 கட்சிகளும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை கொடுக்க வில்லை என்றார்.

திமுக, காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம், பாஜக கூட்டணியும் வேண்டாம். எனவே மக்களோடு மக்களாக இருக்கும் நமது தவெக வேட்பாளர்களுக்கு உங்கள் விஜய்க்கு வாக்களிப்பதாக நினைத்து நமது வேட்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.