×

#BIG NEWS : தமிழகத்தில் பரபரப்பு..! தமிழகம் முழுக்க நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை சட்ட நகல் எரிப்பு போராட்டம்..!

 
தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதலே தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், இன்று (ஏப்ரல் 16) தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுமாக திமுக தலைமை அழைப்பு விடுத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்புச்சட்டை அணிந்தவாறு கொடிக்கம்பத்தில் கருப்புக்கொடியை ஏற்றி வைத்து, மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவின் நகலை எரித்து, "போராடும் போராடும்...தமிழ்நாடு போராடும்.....வெல்வோம் ஒன்றாக...." என்று முழக்கமிட்டார்.

இந்நிகழ்வின் போது, அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராஜேஷ்குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதே போல் தமிழகம் முழுக்க பல இடங்களில் தொகுதி மறுவரையறை சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது 

சென்னை சைதாப்பேட்டையில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து போராட்டம்.கருப்பு சட்டை அணிந்து, கூட்டணி கட்சியினருடன் போராட்டம் செய்த சைதை தொகுதி வேட்பாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்

கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில், வெங்கிட்டாபுரத்தில் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர்.எஸ்.டி.ஜெயலட்சுமி முன்னிலையில் ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது !

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பர்கூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.மதியழகன் அவர்கள் முன்னிலையில் ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது !