×

#BIG NEWS : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி..!

 

காங்., மூத்த தலைவரும், காங்., பார்லி., குழு தலைவருமான சோனியா, 78, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், டாக்டர்களின் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து, டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் அறிந்த, அவரது மகன் ராகுல் மற்றும் மகள் பிரியங்கா இருவரும் மருத்துவமனை விரைந்தனர்.