☰
×

#BIG NEWS : மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையன் வீட்டில் சோதனை..!

 

மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில், கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர், அங்கிருந்த ஏராளமான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். இந்தச் சம்பவம் மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரைப் பிடிப்பதற்காக காவல்துறை சார்பில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்திற்கு முன்னதாக நள்ளிரவு சுமார் 1 மணியளவில், மர்ம நபர் ஒருவர் நகைக்கடையின் பின்புறப் பகுதிக்கு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது பதிவெண் இல்லாத ஸ்கூட்டியில், தமது முகத்தை மறைக்கும் வகையில் அவர் முகமூடி அணிந்திருந்ததுடன், ஹெல்மெட்டும் போட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய அவர், நகைக்கடையின் பின்புறப் பகுதியை நோட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது அப்பகுதியில் இருந்த நாட்டு நாய்கள் அவரைத் துரத்தியதாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் நகைக்கடையின் பின்புறம் செயல்பட்டு வரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.

மதுரை பைபாஸ் சாலையில் தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகை கொள்ளை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெரு பகுதியில் உள்ள சேர்ந்த பட்டதாரி இளைஞர் நிஷாந்த் கிருஷ்ணா வீட்டில் சோதனை வீட்டில் 4 மணி நேரத்தை கடந்து தீவிர விசாரணை.வீடு முழுவதும் உள்ள தண்ணீர் தொட்டிகள், சுவர் பகுதிகள், வீட்டில் உள்ள அறைகள் என அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக தேடிவருகின்றனர். பட்டதாரி இளைஞரின் வீட்டில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவரும் நிலையில் காவல்துறையினர் குவிப்பு.

காவல்துறையினர் சோதனை நடத்திய வீடு பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பட்டதாரி இளைஞருக்குச் சொந்தமானது. இவர் யூடியூபராகவும், பைக் டாக்ஸி ஓட்டுநராகவும் பணியாற்றி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொள்ளைச் சம்பவத்திற்கு முன்பு வாடிக்கையாளர் போல நடித்து மூன்று முறை கடைக்கு வந்து சென்ற நபரின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது

#BREAKING || தனிஷ்க் நகை கொள்ளை- போலீஸ் அதிரடி Madurai Robbery | Jewellery Shop Robbery #Robbery #CCTVFootage #NewsTamil24x7 https://t.co/KjYger3wEy

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) November 13, 2026