×

#BIG NEWS : வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த மு.க.அழகிரியின் மகள்..!!

 

எஸ்பிஐ வங்கியின் மேலாளரை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கயல்விழிக்கு அடையாறில் சொந்தமாக ஒரு கட்டிட வளாகம் உள்ளது. இதில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. எஸ்.பி.ஐ வங்கி செயல்படும் கட்டிடத்தின் லிப்ட் செயல்படாததாதால் உரிமையாளரான கயல்விழியிடம் புகார் அளித்துள்ளனர்.

கயல்விழியின் உதவியாளரை தொடர்புகொள்ள எஸ்பிஐயின் என்ஆர்ஐ கிளை மேனேஜர் ஹர்ஷீன் சிங் முயன்றுள்ளார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. இதனால், ஹர்ஷீன் சிங் கயல்விழியை தொடர்பு கொண்டு, லிப்ட் பிரச்னை குறித்து கூறியுள்ளார். இதையடுத்து, வங்கி கிளைக்கு நேரில் வந்த கயல்விழி, மேனேஜர் ஹர்ஷீன் சிங்கிடம் தனக்கு போன் செய்தது பற்றி காட்டமாக கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

இந்தநிலையில், கயல்விழி கோபமாக பேசுவதை வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு ஆசுவாசுமாக கேட்டிருந்ததால் ஆத்திரமடைந்த கயல்விழி அவரை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் என அறைந்த கயல்விழி மீது காவல் நிலையத்தில்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/WrVNr6eSYuk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/WrVNr6eSYuk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">