#BIG NEWS : இந்த மாதத்தில் இருந்து தான் இலவச மின்சாரம் - அமைச்சர் நிர்மல் குமார்..!
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்பெறும் மின்சார வாரியத்தில் அனைத்தையும் சீரமைக்க வேண்டியது அவசியம். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மின்சார வாரியத்தை சீரமைத்து புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் என்ற நடைமுறையை கொண்டுவருவதற்கு, ஊழியர் பற்றாக்குறை இருக்கிறது. எனவே, ஊழியர்களை அதிகப்படுத்திவிட்டு தான் இந்த கணக்கீட்டை தொடங்க முடியும்.
தொடர்ந்து பேசிய அவர், “மின்சார வாரியத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 2.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இதற்கு முன்பு இருந்த நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது. வரும் மாதங்களிலிருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் நுகர்வோர்களுக்கு பயனளிக்கும். கடன் அதிகமாக இருந்தாலும் 200 யூனிட் இலவச மின்சாரத்தை நம்மால் தொடர்ச்சியாக கொடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று நிர்மல் குமார் உறுதி அளித்தார்.
ஜூன் மாதத்தில் இருந்து 200 யூனிட் இலவச மின்சார திட்டம் நடைமுறைக்கு வரும் என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.