#BIG NEWS : நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்த பேச்சு - எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது..!!
தமிழக வெற்றிக் கழக அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது:
காவிரி டெல்டாவில் குறுவை பயிர்களை காப்பாற்ற முடியவில்லை; சம்பா சாகுபடி என்னவாகும் என விவசாயிகள் தவிக்கின்றனர். நிர்வாகத் திறனற்ற 'டம்மி' முதல்வரால் இந்த நிலைமை; காவிரி விவகாரத்தில், அவர் வாய் திறந்து பேசவே இல்லை; தி.மு.க., மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது தான், அவருக்கு ஒரே கவலை.
ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் தயவு தேவை என்பதால், கர்நாடக காங்., அரசை கேள்வி கேட்க முதல்வர் விஜய் பயப்படுகிறார். மத்திய அரசை பகைத்தால் பிரச்னை வரும் என்பதால், முதல்வர் வாயில் இருந்து பா.ஜ., என்ற வார்த்தையே வரவில்லை. செய்தியாளர்களை பார்த்தால், நீர்வளத்துறை அமைச்சர், திருடன் மாதிரி தலைதெறிக்க ஓடுகிறார். திருட்டு லாட்டரி விற்கும் ஒரு அமைச்சர்; திருட்டு 'விசிடி' விற்ற ஒரு அமைச்சர்; 'பிளாக் டிக்கெட்' விற்கும் ஒரு அமைச்சர்; உருட்டுக்கட்டையோடு சுற்றும் ஒரு அமைச்சர்; போதை பவுடர் அமைச்சர் என, மொத்த அமைச்சரவையும் 'ஜோக்கர்' கூட்டமாக அமைந்துள்ளது.
முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாரும் 'ரீல்ஸ்' போடுகின்றனர். அமைச்சர்களின் உறவினர்கள், அண்ணன், தம்பியெல்லாம் ஆய்வுக்கு செல்கின்றனர். டெல்டா விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
ஆனால், அமைச்சர்கள் படம் பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர். ஏதாவது பிரச்னை வந்தால், மக்களை திசை திருப்ப, 'ரீல்ஸ்' வெளியிடும் வேலையை முதல்வர் செய்து வருகிறார். தி.மு.க., ஆட்சியில் கட்டிய 101 அடி உயர மெட்ரோ ரயில் பாலத்தை, முதல்வர் விஜய் ஆய்வு செய்கிறார். ஊரான் வீட்டு நெய்யில், அவர் வீட்டுக்கு 'ஸ்வீட்' செய்து கொண்டு இருக்கிறார். தி.மு.க., ஆட்சியில் மேகதாது அணையை கட்ட விடாமல் கர்நாடகாவை தடுத்தோம்.
ஆனால், தமிழகத்தில் இப்போது பலவீனமான ஆட்சி அமைந்துள்ளதால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி மேகதாது அணை கட்டி விடலாம் என, கர்நாடக அரசு முழு முயற்சியில் இறங்கியுள்ளது. விவசாயிகள் பிரச்னையை சட்டசபை கூட்டத் தொடரில் சும்மா விடமாட்டோம்.
சட்டசபை, நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும், விவசாயிகளின் குரலாக தி.மு.க., ஒலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
உதயநிதி ஆபாச பேச்சு என்ன?
ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேசுகையில், ''ஜூலை மாதத்தில் 42 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்கணும், ஆனால் இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இது பற்றி இன்னைக்கு இருக்கக்கூடிய முதல்வர் வாய் திறந்து பேசுகிறாரா? பேச மறுக்கிறார். அவர் இருக்கக்கூடிய கவலை என்ன? திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம்.
என்ன பொய் கேஸ் போடலாம்'' என தெரிவித்தார்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர், ''திரிஷா… திரிஷா...'' என கோஷம் எழுப்பினர்.
உடனே உதயநிதி, ''எங்க தண்ணீ வருகிறதோ இல்லை. அங்கே தண்ணீ வரணும், நான் காவிரியை சொன்னேன்'' என்றார். திரிஷா, திரிஷா என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறிய உடனே உதயநிதி இவ்வாறு பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி அவதூறாக பேசியதாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை கோரி த.வெ.க மகளிர் அணி புகார் அளித்துள்ளார்கள். இந்நிலையில், உதயநிதி மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
இதனிடையே, உதயநிதிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தவெக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினை அவரது நீலாங்கரை இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.