×

#BIG NEWS : கல்குவாரியில் கோர விபத்து; பாறை உருண்டு விழுந்து 8 தொழிலாளர்கள் பலி..!!

 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்குவாரி ஒன்றில் பெரிய பாறை சரிந்து விழுந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலி.

தெற்கு பெங்களூருவின் மதனபட்டணத்தில் உள்ள காவேரி என்ற கல்குவாரி நிறுவனத்தில் இந்த விபத்து நடந்த தாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த போது 15 முதல் 20 தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும், ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றிய போது தொழிலாளர்கள் நிற்பதை கவனிக்காமல் ஹிட்டாச்சி இயக்குநர் இயந்திரத்தை இயக்கிய போது பெரிய பாறை சரிந்து விழுந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிரம்மாண்ட பாறை சரிந்து விழுந்ததில் பீகாரை சேர்ந்த 8 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.