×

#BIG NEWS : இதோ ஆதாரம்..“எம்.பி. சீட் தருவதாக ஏமாற்றியவர் எடப்பாடி தான்” - பிரேமலதா குற்றச்சாட்டு..!!

 

திருவண்ணாமலை கோயிலில் வைத்து எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு வழங்கிய ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்பு காண்பித்தார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. 

முதலமைச்சர் வேட்பாளராக இருந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமி இப்படி எல்லாம் பேசக்கூடாது. 

அவர் கையெழுத்து போட்ட ஒப்பந்தத்தை இதுவரை நான் வெளியே காட்டியதில்லை. அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கோயிலில் காண்பிக்கிறேன் என்று காண்பித்தார். அதில், 5 எம்.பிக்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக கூறப்பட்டுள்ளது. ராஜ்யசபா சீட்டிற்காக ஆண்டு குறிப்பிடாதது பற்றி பிரேமலதா கேட்டிருக்கிறார்.

அதற்கு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து தற்போது வரை ஆண்டை குறிப்பிடும் வழக்கம் இல்லை. இது வெறும் காகிதம் தான். சொன்ன வார்த்தை தான் முக்கியம். அதை காப்பாற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். தற்போது தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவதாக நாங்கள் எங்கே சொன்னோம் என்கிறார். அரசியலில் கண்ணியத்தை கடைபிடித்து இதுவரை காண்பிக்காமல் இருந்தேன். ஆனால் அந்த ஒப்பந்தத்தை காட்ட வேண்டிய நிலைக்கு என்னை அவர் தான் ஆளாக்கி இருக்கிறார்.

தேமுதிகவுக்கு 2025-ல் ராஜ்யசபா சீட் தருவதாக கூறிவிட்டு பின்னர் அப்படி சொல்லவில்லை என EPS பொய் பேசுவதாக பிரேமலதா கூறியுள்ளார். 2024-ல் போடப்பட்ட ஒப்பந்தம் ஆதாரம் இதுதான் என முதல்முறையாக ஊடகத்திற்கு காண்பித்தார். மேலும், தேமுதிகவை அரை பர்சன்ட்(0.5%) ஓட்டு கட்சி என EPS பேசுவது அரசியல் நாகரிகம் அல்ல எனவும், அப்படி சொன்ன அவர் மே 4-ம் தேதிக்கு பிறகு ICU-வுக்கு செல்லும் நிலை ஏற்படும் என்றும் சாடினார்.