#BIG NEWS : கேரளாவில் ஏற்பட்ட கனமழை... 8 பேர் உயிரிழப்பு; 8 பேர் மாயம்..!!
கேரளாவில், தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மங்கலம் அணையின் பாதுகாப்பு கருதி, 6 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
வரத்துக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிசூர், இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 8 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இது குறித்து கேரளா முதல்வர் சதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் தொடங்கியுள்ளன.
கட்சியினர், தன்னார்வ அமைப்புகள் இத்தூய்மைப் பணிகளில் பங்கேற்க வேண்டும். அரசின் முழு ஆதரவும் வழங்கப்படும்.
இதுவரை மழையால் 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேரைக் காணவில்லை. 13 பேர் காயமடைந்துள்ளனர். 5792 பேர் 209 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 27 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆனது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்தவர்களுக்கும் அரசு உதவி செய்யும்.மலைப் பகுதிகளில் கண்காணிப்பு தொடர வேண்டும்.
மழையின் அளவு குறைந்திருந்தாலும், எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு சதீசன் கூறியுள்ளார்.