☰
×

தெலுங்கானாவில் கோர விபத்து... அரசு பஸ்- லாரி மோதி விபத்து; 17 பேர் பரிதாப பலி..!!

 

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பயணிகள் 70 பேருடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த கிராவல் மண், பஸ் பயணிகள் மீது கொட்டியது. இதில் பயணிகள் 17 பேர் தப்பிக்க வழியின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர்.

 

இந்த விபத்தால் செவெல்லா - விகாராபாத் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது: ரங்கா ரெட்டி மாவட்டத்தில் செவெல்லா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கானாபூர் கேட் அருகே அரசு மற்றும் லாரி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தனர்.