#BIG NEWS : தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 அதிரடியாக குறைந்தது..!
Jun 1, 2026, 09:50 IST
ஈரான் போரின் தாக்கத்தால் உலக நாடுகள் அத்தியாவசிய பொருட்களான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தின் மீது கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, அதிக அளவில் தங்கம் புழக்கத்தில் இருக்கிற நாடாக இந்தியா இருந்தாலும், இங்கு 80% தங்கம் வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த இறக்குமதி செலவை குறைக்கும் நோக்கில், இப்போதைக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சர்வதேச சந்தை விலை மாற்றத்தை பொறுத்து தினந்தோறும் தங்கம் விலையானது சில நூறுகளில் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று (ஜூன்.01) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. நேற்று (மே.31) ஒரு சவரன் ரூ.117,040-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1040 குறைந்து, ரூ.1,16,000க்கு விற்பனையாகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,630க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.130 குறைந்து, ரூ.14,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.290க்கு விற்பனையாகிறது.
மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000க்கு விற்கப்படுகிறது.