×

#BIG NEWS : முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்..!!

 

மன்மோகன் சிங் அமைச்சரவையில் 2013 முதல் 2014ம் ஆண்டு வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர் சுதர்சன நாச்சியப்பன். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், சிவகங்கையில் சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று (செப் 17) சிகிச்சை பலன் அளிக்காமல், தனது இல்லத்தில் சுதர்சன நாச்சியப்பன் காலமானார். 1999-2004 காலகட்டத்தில் சிவகங்கை எம்பியாகவும், 2004-2016ம் ஆண்டுகளில் ராஜ்யசபா எம்பியாகவும் சுதர்சன நாச்சியப்பன் இருந்துள்ளார்.

இவர் வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.