×

#BIG NEWS : முன்னாள் அமைச்சர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை..!!

 

வாக்காளர்களுக்கு கொடுக்க பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் டி.குன்னத்தூர் இல்லத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தி பணம் பட்டுவாடா செய்ததாகவும் புகார் எழுந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் எதுவும் சிக்காததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் இந்த சோதனை குறித்து குற்றம்சாட்டியுள்ள ஆர்பி உதயகுமார், "தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுகின்றனர். அம்மா கோவிலின் ஒவ்வொரு அறையையும் அங்குலம் அங்குலமாகச் சோதனை செய்தார்கள். ஆனால், ஒரு சிறு பொருள் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே நாங்கள் பணியாற்றுகிறோம். ஆனாலும், அதிமுகவின் தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. எங்கள் மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்குப் பயமில்லை" என்று தெரிவித்தார்.