☰
×

#BIG NEWS : பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் ரெய்டு...என் வீட்டில் கிடைத்தது 3 பூனை, 1 நாய்!" -  கொந்தளித்த பாலாஜி முருகதாஸ்..!!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். சீசன் 4 பிக் பாஸில் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன்பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஓ.டி.டி.யில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் பாலாஜி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். இதிலும் தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி டைட்டில் வின்னர் ஆனார், பாலாஜி முருகதாஸ்.

பாலாஜி முருகதாஸ் வீட்டில் திடீரென தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையை நடத்தினார்கள். அந்த சோதனையில் அவர்களுக்கு எந்தவிதமான போதை பொருளோ அல்லது அவர் போதை பொருள் பயன்படுத்தியதற்கான தடயமோ சிக்கவில்லை என்றே தெரிகிறது.

அதனையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில்,

என் மீது புகார் கொடுத்தவர் யார் என்பதை மட்டுமே தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நடிகர் விஜய் அவர்களிடம் பல முறை கேட்டும் அவர்கள் அதை பற்றி எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை.

ரத்த பரிசோதனைக்குகூட நான் தயார்தான். ஆனால் உங்கள் காவல் துறையின் செயல்பாடு வெட்கக்கேடானது. 15 போலீஸ் எனது வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் பார்த்ததெல்லாம் மூன்று பூனைகளும் ஒரு நாயும் மட்டும்தான். அவர்கள் எந்த அடிப்படையில் எனது வீட்டுக்கு வந்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எந்த தேடுதல் வாரண்ட்டும் இல்லை. என் மீது தவறு இல்லாததால் தாராளமாக எனது வீட்டுக்குல் வந்து சோதனையிட அனுமதித்தேன். இருப்பினும் அவர்கள் இப்படி நடந்துகொண்டதற்கு முறையான விளக்கம் வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

பாலாஜி முருகதாஸ்; வீட்டில் நடைபெற்ற இந்த திடீர் ரெய்டு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

I just want to know who gave the complaint @actorvijay i want to know who gave the complaint and for what ! I asked them n number of times they didn’t disclose . I’m up for blood test. But shame on ur police department ! 15 police came to my house all they found is 3 cats and one dog ! But i wanna know on what basis they came! There’s no search warrant since I’m clean i invited them home. But i need an explanation for this act of police.

— Balaji Murugadoss (@OfficialBalaji) November 9, 2026