☰
×

#BIG NEWS : SIR ஆல் மாறியதா தேர்தல் முடிவுகள்? தவெக வெற்றிக்கு SIR தான் காரணமா.?

 

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் (SIR) ஏற்பட்ட நீக்கம், தேர்தல் முடிவுகளைப் பாதித்ததாக 'பிசினஸ் லைன்' வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது. குறைந்த வாக்குகள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுகவும், அதிகளவில் வாக்குகள் நீக்கப்பட்ட இடங்களில் தவெகவும் வென்றுள்ளன. 80,000+ வாக்குகள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும், 50,000-80,000 நீக்கப்பட்ட 22-ல் 18 இடங்களிலும் தவெக வென்றுள்ளது. மேலும் 30,000-50,000 நீக்கப்பட்ட 37-ல் 24-லும், 20,000-30,000 நீக்கப்பட்ட 66-ல் 32 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது.

அதிக வாக்காளர்கள் நீக்ப்பட்ட தொகுதிகளில் தவெக தான் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளதாக Business Line என்ற நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

பிசினஸ் லைன் வெளியிட்ட அறிக்கையில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெற்றி பெற்ற கட்சிகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி பாராத்தால், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் தான் தவெக-வின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது எனத் தெரிகிறது.

* 10,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்ட 19 தொகுதிகளில் திமுக - 7, அதிமுக - 6, தவெக - 2 மற்றும் மற்ற கட்சிகள் - 4 தொகுதிகளில் வென்றுள்ளன.

* 10,000 - 20,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்ட 80 தொகுதிகளில் அதிமுக - 24, தவெக - 22, திமுக - 20 மற்றும் மற்ற கட்சிகள் - 14 தொகுதிகளில் வென்றுள்ளன.

* 20,000 - 30,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்ட 66 தொகுதிகளில் தவெக - 32, திமுக - 21, அதிமுக - 11 மற்றும் மற்ற கட்சிகள் - 2 தொகுதிகளில் வென்றுள்ளன.

* 30,000 - 50,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்ட 37 தொகுதிகளில் தவெக - 24, திமுக - 8 மற்றும் அதிமுக - 5 தொகுதிகளில் வென்றுள்ளன.

* 50,000 - 80,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்ட 22 தொகுதிகளில் தவெக - 18, திமுக - 3 மற்றும் அதிமுக - 1 தொகுதிகளில் வென்றுள்ளன.

* 80,000 வாக்காளர்களுக்கும் மேல் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெக தான் வெற்றி வாகை சூடியுள்ளது.

பிசினஸ் லைன் வெளியிட்ட அறிக்கையின் படி, குறைந்த அளவு வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுகவும், அதிகளவு வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெகவும் வென்றுள்ளன. ஒருவேளை SIR நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாறியிருக்கக் கூடும் என இந்த அறிக்கை உணர்த்துகிறது.

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், SIR நடவடிக்கையில் தன்னிச்சையாக செயல்பட்டார் என மற்ற தேர்தல் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் செய்யவுள்ளது. ஏற்கனவே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் SIR நடவடிக்கையின் தாக்கம் தவெகவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுகுறித்து தவெக தரப்பில் எவ்வித கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.