×

#BIG NEWS : விஜய்க்கு பதில் அதிமுக-வை ஆதரிக்க சொன்னாரா மு.க.ஸ்டாலின்? எம்.ஏ.பேபி பேட்டியால் கிளம்பிய புதிய சர்ச்சை!

 

தனி​யார் தொலைக்​காட்சிக்கு அளித்த பேட்​டி​யில் பேசிய மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அகில இந்திய பொதுச்​ செய​லா​ளர் எம்​.ஏ.பேபி,

எங்​களை பொறுத்​தவரை திமுக தலை​வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்​தாலோ​சித்​தோம். எங்​களது மாநில தலை​வர்​கள், அவரை சந்​தித்து பேசி​ய​போது, திமுக ஆதர​வுடன் ஒரு அரசை அமைப்​பது குறித்த யோசனை முன்​வைக்​கப்​பட்​டது.

அதாவது, அதிமுக தலை​மையி​லான அரசை திமுக வெளி​யில் இருந்து ஆதரிக்க இருப்​ப​தாக தெரி​வித்​தனர். மற்ற விவரங்​கள் எதை​யும் எங்​களிடம் கூற​வில்​லை. ஆனால், திமுக என்ன செய்ய விரும்​பு​கிறது என்​பதை எங்​களிடம் நியாய​மான முறை​யில் கலந்தாலோ​சித்​தனர்.

அதை நாங்​களும் ஆதரிக்க வேண்​டும், அவர்​களது அணுகு​முறையை நாங்​களும் பின்​பற்ற வேண்​டும் என்று திமுக விரும்பியது. நாங்​கள் திமுகவை எதிர்க்​கப் போவ​தில்​லை.ஆனால், பாஜக கூட்​ட​ணி​யில் ஒரு அங்​க​மாக இருந்த அதி​முகவை ஆதரிக்​கும் அரசி​யல் முடிவை எங்​களால் ஏற்​றுக்​கொள்ள முடியாது. தேர்​தலில் அதி​முக தோல்​வியடைந்து விட்​டது.திமுக​வும் தோல்​வியடைந்துவிட்​டது. நாங்​கள் திமுக கூட்டணியில் ஒரு அங்​க​மாக இருந்​தோம். அதனால் நாங்​களும் தோற்​று​விட்​டோம். அந்​தவகை​யில், நாங்​கள் ஆட்சி அமைக்க முடியாது.எனவே, தமிழக சட்​டப்​பேர​வை​யில் தனிப்​பெரும் கட்​சி​யாக உருவாகிய தவெக​வுக்கு எங்​கள் ஆதரவை வழங்​கி​யிருக்​கிறோம்​. 

தவெக-விற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக வலியுறுத்தியதை தாங்கள் மறுத்துவிட்டதாக, கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.