☰
×

#BIG NEWS : தேவாவின் இறுதி நொடிகள்.. மருத்துவர்கள் சொன்ன விளக்கம்..!

 

இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இறப்புக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஊடகங்களுக்கு பேட்டியளித்த மருத்துவர்கள், ''சார் வரும்போதே இதயதுடிப்பு இல்லை. ஒன்றரை மணி நேரம் முயற்சி செய்தும் அவரது Heart Beat Restart ஆகவில்லை. சிபிஆர் சிகிச்சை செய்தும் பலனளிக்கவில்லை. அதன் பிறகு இசிஜி எடுத்துவிட்டு குடும்பத்தினருக்கு தகவல் அளித்தோம். மாரடைப்பு காரணமாகவே உயிர் பிரிந்துள்ளது என்றார். 

பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா, திடீர் மாரடைப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக 2026 அக்டோபர் 17 சனிக்கிழமை அன்று காலமானார். அவரது இறுதி நிமிடங்கள் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து அவர் அனுமதிக்கப்பட்ட சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனை மருத்துவர்கள் ஊடகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தேவாவுக்கு காலை சுமார் 8:00 மணியளவில் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் காலை 8:30 மணியளவில் சூர்யா மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் போதே மயக்க நிலையிலும், நாடித் துடிப்பு (Pulse) மற்றும் இதயத்துடிப்பு இல்லாத நிலையிலும் இருந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்துடிப்பு நின்றுவிட்ட போதிலும், அவரை எவ்வாறாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று அவசர சிகிச்சைப் பிரிவில் (ER) இருந்த மருத்துவக் குழுவினர் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாகப் போராடினர்.அவருக்கு உடனடியாக சி.பி.ஆர் (CPR - நெஞ்சுப்பகுதி அழுத்த சிகிச்சை) வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இதயத்தை மீண்டும் இயங்கச் செய்ய கார்டியாக் ஷாக் (Shock) உள்ளிட்ட அனைத்து விதமான அவசர மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டன. மருத்துவக் குழுவினர் எவ்வளவோ முயன்றும் அவரது இதயம் மீண்டும் துடிக்கவில்லை.

ஏற்கெனவே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பைபாஸ் (Bypass Surgery) அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவாவின் இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது