#BIG NEWS : டெல்டா விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்..!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்தது.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி த.வெ.க. அரசின் முதல் பொது நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கையும் நேற்று (ஆகஸ்ட் 6) தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேளாண் நிதிநிலை அறிக்கையில் த.வெ.க. தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த விவசாயப் பயிர் கடன் தள்ளுபடி பற்றிய எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், த.வெ.க. அரசு விவசாயப் பயிர்க் கடன் தள்ளுபடியை இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சென்னை தலைமைச் செயலகம் முன்பு கோணி பைகளை அணிந்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பேசிய விவசாயிகள், தவெக அரசின் நேற்றைய வேளாண் பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இல்லாமல், ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டினர். மேலும், பயிர்க் கடன் தள்ளுபடியை உடனடியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் குரலைக் கேளுங்கள் மற்றும் விவசாயிகள் வளர்ந்தால் தான் தமிழ்நாடு வளரும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி த.வெ.க. அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி டெல்டா மாவட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைதுசெய்து காவல் வாகனங்களில் ஏற்றி, அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.