#BIG NEWS : கொடூரமான வைரஸ் பரவல்..! அவசரநிலையை பிரகடனப்படுத்திய உலக சுகாதார அமைப்பு..!
ஆப்பிரிக்கக் காடுகளில் பரவத் தொடங்கிய கொடூரமான வைரஸ் நோய்களில் ஒன்றான எபோலா வைரஸின் (Ebola virus) புதிய திரிபான ‘பண்டிபுகியோ’ (Bundibugyo ebolavirus) தொற்று, தற்போது மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மிகத் தீவிரமாகப் பரவி வருவது உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடுகளுக்கும் பரவி மனித உயிர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதை அடுத்து, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு (WHO) ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் விடுக்கப்படும் மிக உயரிய எச்சரிக்கையான ‘சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை’ (Public Health Emergency of International Concern – PHEIC) அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல் திரவங்கள் மற்றும் இரத்தம் மூலமாக மனிதர்களிடையே மிக வேகமாகப் பரவக்கூடிய இந்த பண்டிபுகியோ வைரஸ், உடலில் கடுமையான காய்ச்சல், தசைவலி, உள் மற்றும் வெளி இரத்தப்போக்கு (Hemorrhage) போன்ற தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தி மிகக் குறுகிய நாட்களிலேயே மரணத்தை விளைவிக்கும் தன்மை கொண்டதாகும்.
சர்வதேச அளவில் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தவும், பிற கண்டங்களுக்கு இது பரவாமல் தடுப்பதற்கும் உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக ஒன்றிணைந்து தீவிரக் கண்காணிப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு மருத்துவப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான புதிய மருத்துவச் சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு மிக அவசரமாக வலியுறுத்தியுள்ளது.