×

#BIG NEWS : தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிவு..!

 

எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ராஜ்மோகன் தவெக சார்பில் போட்டியிடுகிறார்.  

இந்நிலையில் சென்னை எழும்பூர் தவெக வேட்பாளர் ராஜ்மோகன், ஓட்டேரி நந்தா, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. கோயிலில் அமர்ந்து மாற்றுக் கட்சியினரை விமர்சித்து பேட்டி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக சூளை அங்காளம்மன் கோயில் செயல் அலுவலர் கொடுத்த புகாரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூளை அங்காள பரமேஸ்வரி கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ பதிவு செய்து யூட்யூப் வலைதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக த.வெ.க எழும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜமோகன், த.வெ.க ஊடகப்பிரிவு நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட், த.வெ.க எழும்பூர் பகுதிச் செயலாளர் ஓட்டேரி நந்தா ஆகிய மூவர் மீது வேப்பேரி போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவில் கருவறை வரை சென்று வீடியோ பதிவு செய்து யூட்யூப் தளத்தில் பதிவேற்றியதால் கோவில் EO கங்காதேவி என்பவர் அளித்த புகாரில் வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/ladrz66U4YU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/ladrz66U4YU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">