×

#BIG NEWS : உங்க ஓட்டு ஏற்கனவே பதிவாகியிருந்தால் மீண்டும் வாக்களிக்க முடியுமா..?

 

தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய மாநில காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் சுமார் 1.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.


தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டு கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில், 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என அரசு மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று அரசு பொது விடுமுறை அளித்துள்ளதால், அனைவரும் குடும்பத்துடன் சென்று தகுதியான வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


வாக்குச்சாவடிக்கு நீங்கள் செல்லும் முன்பே உங்கள் பெயரில் யாராவது கள்ள ஓட்டுப் போட்டிருந்தால், உங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட இந்திய தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் கீழ் 49P என்ற சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது.


விதி 49P-ன் கீழ் வாக்களிக்கும் வழிமுறைகள்
அடையாளத்தை உறுதிப்படுத்துதல்: உங்கள் ஓட்டு போடப்பட்டுவிட்டது எனத் தெரிந்தால், உடனடியாக அங்கிருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (Presiding Officer) முறையிட வேண்டும். உங்களின் அசல் அடையாள அட்டையைக் காட்டி நீங்கள் தான் உண்மையான வாக்காளர் என்பதை நிரூபிக்க வேண்டும்.

படிவம் 17B (Form 17B): உங்கள் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பிறகு, தேர்தல் அதிகாரி உங்களை 'டெண்டர் ஓட்டு' (Tendered Vote) போட அனுமதிப்பார். இதற்காக படிவம் 17B-யில் உங்கள் விவரங்கள் பதியப்படும்.

தாள்படி வாக்கு (Ballot Paper): நீங்கள் மின்னணு இயந்திரத்தில் (EVM) வாக்களிக்க முடியாது. அதற்குப் பதிலாக உங்களுக்கு ஒரு வாக்குச்சீட்டு (Ballot Paper) வழங்கப்படும். அதில் உங்கள் விருப்பமான வேட்பாளருக்கு முத்திரையிட்டு வழங்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை: இந்த வாக்குகள் தனியாக ஒரு கவரில் வைக்கப்படும். தேர்தல் முடிவில் வெற்றி-தோல்வி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (Margin) இருக்கும்போது, இந்த 49P வாக்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு எண்ணப்படும்.

நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அல்லது தேர்தல் தொடர்பான புகார்கள் இருந்தால் 1950 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.