×

#BIG NEWS : டெல்லியை தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்..!

 

பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது, அதில் உயர்நீதிமன்ற கட்டிடத்தில் குண்டு வெடிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை இருந்தது.

இதனையடுத்து போலீசார் விரைந்தனர், மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில் சற்று முன் தான் டெல்லி ஐகோர்ட்டுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.