#BIG NEWS : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Oct 4, 2025, 16:51 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மீனாட்சி அம்மன் கோவில் வளாக பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவிலில் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்ய இருந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் , சிக்கந்தர் தர்காவுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கும் தீவிர சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.