#BIG NEWS : வங்கிகள் வேலைநிறுத்தம் எதிரொலி: ATM-களில் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்..!!
வரும் திங்கள் முதல் புதன் கிழமை வரை 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான தொடர் விடுமுறை என்பதால் 5 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தவிர்க்கும் விதமாக வங்கிகளுக்கு நாளை வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஸ்டிரைக் அறிவிக்கப்பட்ட 3 நாட்களும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேவைகள் முற்றிலும் முடங்கும் நிலை இருப்பதால், வரும் திங்கள் முதல் புதன் கிழமை எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏடிஎம் சேவை வழங்கப்படும் என பொதுத்துறை வங்கிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்து இருக்கும் ஏடிஎம்-இல் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்-களில் மாதத்திற்கு 3 முறையும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம். அதற்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் ஒரு பரிவர்த்தனைக்கு 23 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் இந்த மூன்று நாட்களில் இந்த சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.