#BIG NEWS : செப்.11-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.. 4 நாட்கள் சேவை பாதிக்கும் அபாயம்..!
செப்டம்பர் 11-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 5 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என வங்கி ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
ஐந்து நாள் வங்கி வாரத்தை அமல்படுத்துவதில் ஏற்படும் தாமதம், செயல்திறன் சார்ந்த ஊக்கத் திட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல கோரிக்கைகளைக் கண்டித்து, ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) செப்டம்பர் 11 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கும்.
வேலைநிறுத்தம் நடந்தால், நாட்டின் பல பகுதிகளில் வங்கிச் சேவைகள், குறிப்பாகப் பொதுத்துறை வங்கிகளில், நான்கு நாட்களுக்குப் பாதிக்கப்படும்.
செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை,.செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் வார விடுமுறையும், 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் உள்ளதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தங்கள் கோரிக்கைகள் செவிமடுக்கப்படாவிட்டால், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.