#BIG NEWS: மு.க.அழகிரி மகள் கயல்விழியை கைது செய்ய வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டம்..!
அடையாறில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில் எஸ்.பி.ஐ., என்.ஆர்.ஐ., (SBI NRI) காந்தி நகர் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு பழுதடைந்திருந்த மின்தூக்கியை (லிஃப்ட்) சீரமைக்குமாறு கட்டட உரிமையாளரின் (கயல்விழி) உதவியாளரை பலமுறை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் கட்டட உரிமையாளர் கயல்விழி அழகிரியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி அழகிரி, லிப்ட் செயல்படாதது தொடர்பாக வங்கி மேலாளர் தன்னை சந்திக்க வந்த போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது கயல்விழி கோபமாக பேசிக் கொண்டிருந்த நிலையில், வங்கி மேலாளர் தனது கன்னத்தில் கையை வைத்தபடி அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார். இதனால் கோபமடைந்த கயல்விழி வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, எஸ்.பி.ஐ RBO-II தலைமை மேலாளர் நமச்சிவாயம், கடந்த ஜூலை 21ஆம் தேதி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்தப் புகாரில் சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ நிர்வாகம் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில், புகார்தாரர் மற்றும் தொடர்புடைய சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
நேற்று மாலை விசாரணைக்கு ஆஜரான கயல்விழி அழகிரியிடம், புகாரின் அடிப்படையிலும், சி.சி.டி.வி காட்சி ஆதாரத்தின் அடிப்படையிலும், சாஸ்திரி நகர் போலீசார் சுமார் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு கயல்விழி கைது செய்யப்பட்டு பின்பு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கயல்விழியை கைது செய்ய வலியுறுத்தி, சென்னை அண்ணாநகர் எஸ்பிஐ வங்கி கிளையில், ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.பி.ஐ. வங்கி மேலாளருக்கு பளார்.. மு.க.அழகிரி மகள் கயல்விழியை கைது செய்ய வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டம்..!#Chennai | #SBIManager | #Protest | #Kayalvizhi | #Employees | #PolimerNews pic.twitter.com/jPqercnSYL
— Polimer News (@polimernews) July 29, 2026
எஸ்.பி.ஐ. வங்கி மேலாளருக்கு பளார்.. மு.க.அழகிரி மகள் கயல்விழியை கைது செய்ய வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டம்..!#Chennai | #SBIManager | #Protest | #Kayalvizhi | #Employees | #PolimerNews pic.twitter.com/jPqercnSYL
— Polimer News (@polimernews) July 29, 2026