#BIG NEWS : ராயபுரத்தில் மகுடம் சூடிய ஆட்டோ ஓட்டுநர்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் தோல்வி..!
அதிமுக சார்பாக ஜெயக்குமார் முதல் முறையாக 1991 ஆம் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் வெற்றிபெற்றார். அதன் பிறகு 2001, 2006, 2011 மற்றும் 2016 என ஐந்து முறை ராயபுரம் தொகுதியில் வெற்றிபெற்று மண்ணின் மைந்தனாக உருவெடுத்தார் ஜெயக்குமார். அமைச்சராகவும் இருந்த ஜெயக்குமார் கடந்த சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார்.
ராயபுரம் என்றாலே ஜெயக்குமார் தான் என இருந்து வந்த நிலையில் அந்த தொகுதியில் அவர் தோல்வியை தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்தமுறை ராயபுரம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட ஐ ட்ரீம் மூர்த்தி இங்கு வெற்றிபெற்றார். இம்முறை திமுக சார்பாக சுபேர் கான் ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றார்.தவெக சார்பில் வேட்பாளர் விஜய் தாமு போட்டியிட்டார்.
இந்நிலையில் ராயபுரம் தொகுதியை ஆட்டோ ஓட்டுனர் விஜய் தாமு கைப்பற்றியுள்ளார். மேலும் ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் மீண்டும் ஒருமுறை தோல்வியை தழுவியது அந்த கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.