☰
×

#BIG NEWS : தமிழகத்தில் டிச.6ல் உதயமாகிறது புதிய கட்சி..! 

 

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கடந்த 1989ல் கட்சி துவங்கி, 40 ஆண்டுகளுக்கு மேல், அ ரசியலில் முக்கிய புள்ளியாக வலம் வந்தார். கடந்த ஜூலை 25ல், தன் 88வது பிறந்த நாளின்போது, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், பா.ம.க.,வை, தன் மகன் அன்புமணி பார்த்துக் கொள்வர் என்றும் அறிவித்தார்.

இதற்கிடையே, ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவியபோது, ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, அரசியலுக்கு அறிமுகமானார். அவருக்கு, ராமதாசின் இந்த முடிவு பிடிக்காததால், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில், ரங்கசாமியின் என்.ஆர்.காங்., கை விரிவுபடுத்தி, தனக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால், அன்புமணி தரப்பினர் நெருக்கடியால், ரங்கசாமி எந்த உத்தரவாதமும் தராமல் அமைதி காத்தார். இதனால், அந்த முயற்சியை ஸ்ரீகாந்தி கை விட்டார்.

இந்த சூழ்நிலையில், வரும் டிச.6ம் தேதி, சென்னையில் புதிய அரசியல் இயக்கத்தை அவர் தொடங்கப்போவதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய கட்சி தொடங்குவதால், சென்னையில் முகாமிட்டு, ராமதாசின் ஆதரவாளர்கள் மற்றும் பா.ம.க.,வில் இ ருந்து நீண்ட காலம் ஒதுங்கியுள்ள முக்கிய தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஸ்ரீகாந்தி ஈடுபட்டு வரு கிறார்.