☰
×

#BIG NEWS : "TNPSC தேர்வெழுதுபவர்களுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி!  வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு..

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 மற்றும் இதர அரசுப் பணித் தேர்வுகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, குரூப் 1 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பான 32, தற்போது 37-ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல, குரூப் 1 தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 47-இல் இருந்து 52 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு ஏற்கனவே உள்ள வயது சலுகையோடு இது கூடுதலாக அமையும்.

யாருக்கு என்ன வயது உயர்வு?

மேல்வரம்பு வயது உயர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு (BC, BCM, MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயது சலுகையோடு கூடுதலாக அமையும்.

1. குரூப் - I பதவிகள்:
- பொதுப் பிரிவினர்: 32-ல் இருந்து 37 ஆக உயர்வு
- ஒதுக்கீட்டுப் பிரிவினர் (BC, MBC, SC, ST): *37-ல் இருந்து 42 ஆக உயர்வு
- மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு: 42-ல் இருந்து 47
- மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவு: *47-ல் இருந்து 52 வரை!

2. குரூப் - II & II-A:
- பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35
- ஒதுக்கீட்டுப் பிரிவு: உச்ச வயது வரம்பில்லை (ஏற்கனவே)
- மாற்றுத்திறனாளிகள் பொது: *40-ல் இருந்து 45
- மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: உச்ச வயது வரம்பில்லை

3. குரூப் - IV:
- பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35
- பொதுப் பிரிவில் பட்டதாரி (Having higher qualification): 32-ல் இருந்து 37
- BC, BCM, MBC & DNC: 32-ல் இருந்து 37 / 40-ல் இருந்து 45
- SC, ST மற்றும் ஆதரவற்ற விதவை: *35-ல் இருந்து 40 / 45-ல் இருந்து 50 வரை!

எப்போது முதல் அமல்?

இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் அடுத்த 5 ஆண்டுகள் வரை  நடைமுறையில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

🔔 | TNPSC குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான நேரடி நியமன வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவு! https://t.co/w2pRjhraqu

— Sai Jegadheesh (@saijegadheeshh) October 30, 2026

🔔 | TNPSC குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான நேரடி நியமன வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவு! https://t.co/w2pRjhraqu

— Sai Jegadheesh (@saijegadheeshh) October 30, 2026