×

#BIG NEWS : ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 29 பேர் உயிரிழப்பு..!!

 

ரஷ்யாவில் ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று கிரைமியாவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 29 பேரும் உயிரிழந்தனர்.

அவர்களில் ஆறு பேர் விமான ஊழியர்கள் என்று ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு புதன்கிழமை (ஏப்ரல் 1) அதிகாலை தெரிவித்ததாக டாஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் அந்த அன்-26 (An-26) விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மீட்கும் படையினர் விபத்திற்குள்ளான விமானத்தைக் கண்டுபிடித்தனர். அதிலிருந்த 23 பயணிகளும் ஆறு ஊழியர்களும் இறந்துவிட்டனர்,” எ

 தொழில்நுட்பக் கோளாறே அந்த விமான விபத்திற்குக் காரணமாக நம்பப்படுகிறது.