×

#BIG NEWS : எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதி 27 வயது இளைஞர் பலி..! சிசிடிவி வீடியோ வெளியீடு..! 

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று சிவகங்கை மாவட்டம், அரண்மனை வாசல் பகுதியில் கூட்டணி கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள புறப்பட்டுச் சென்றார்.


சிவகங்கையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி எடப்பாடி பழனிசாமி சென்றுகொண்டிருந்தபோது, மதகுபட்டி அருகே அவரது பாதுகாப்பு வாகனம், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது விபத்து ஏற்பட்டது. இதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதாக சொல்லப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.


உயிரிழந்த இளைஞர் மதகுபட்டி, மேலத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (27) எனத் தெரியவந்துள்ளது. 

 

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/eP4qRBu3Pxo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/eP4qRBu3Pxo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">