☰
×

#BIG NEWS : கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலி..!!

 

நாகாலாந்து மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

துயென்சாங் மாவட்டத்தில் 11 பேரும், மொகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3,000 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய, மாதிரிகள் குவஹாத்தியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அடையாளம் தெரியாத அல்லது லேபிள் இல்லாத சந்தேகத்திற்குரிய மதுபானங்களை அருந்த கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.தலைச்சுற்றல், மங்கலான பார்வை, மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டர்களை அணுகி சிகிச்சை பெற அறிவுறுத்தியுள்ளனர்.

1990 முதல் மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.