×

#BIG BREAKING : வெளியேறிய வெள்ளை புகை..புதிய போப் தேர்வானதாக அறிவிப்பு..!

 

உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாடிகன் சிட்டியில் ஏப்.,21ல் காலமானார். அவரது இறுதிச் சடங்கு செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது.


புதிய போப்பை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்தது. போப் தேர்வு செய்யப்பட்டார் என்பதை சிஸ்டைன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கியில் வெளியாகும் புகையின் நிறத்தை கொண்டு மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும். புகை போக்கியில் கறுப்பு நிற புகை வெளியானல் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், வெள்ளை நிற புகை வெளியானால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டார் என்றும் அர்த்தம்.

நேற்று போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். நேற்று நடந்த கூட்டத்தில், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் இரவு 9.05 மணிக்கு புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தில் வெண்புகை வெளியிடப்பட்டுள்ளது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை கத்தோலிக்க கிறிஸ்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.புதிய போப் ஆண்டவராக ராபர்ட் ப்ரி வோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் போப் 14-ம் லியோ என அறியப்படுவார்.