#BIG BREAKING : அரசியலில் திருப்பம் : NDA கூட்டணியில் இணைய நாங்கள் தயாராக உள்ளோம் - ஓபிஎஸ் பேட்டி..!
சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் மவுனம் காத்து வருவதால் ஓபிஎஸ்ஸுடன் இருந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவருடன் இருந்து விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துவிட்டனர்.
இந்த நிலையில் இந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக, நேற்று பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் முகாமிட்ட செய்தியாளர்களிடம் போடி அலுவலகம் புறப்பட்ட ஓபிஎஸ் பேசினார். அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு அவர், "இன்று (வியாழன்) நிர்வாகிகளுடன் ஆலோசனைக்குப் பின் முடிவை அறிவிக்கிறேன்," என்று அவசரமாகக் கூறிவிட்டுச் சென்றார்.
இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவை நாங்கள் இன்னும் எடுக்கவில்லை. அதிமுகவை மீட்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது கோரிக்கை."மக்களிடம் உள்ள ஆதரவைக் காட்டவே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டேன்...செயற்கையாக செய்த சூழ்ச்சியால் தான் ராமநாதபுரத்தில் நான் தோல்வியடைந்தேன்.தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை.
"NDA கூட்டணியில் இணைய நாங்கள் தயாராக உள்ளோம், கூட்டணியில் சேர்த்து கொள்ள ஈபிஎஸ் தயாராக உள்ளாரா? என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ்... தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களை இணைக்க டிடிவி தினகரனால் முடியும் எனவும் தெரிவித்தார்.